Top News

நாடு முழுவதும் கூட்டங்களை நடத்துவதற்கு மொட்டு தீர்மானம்



நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, முதலாவது கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (09) பிற்பகல் 2.00 மணிக்கு அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மற்றும் பல ஆளுங்கட்சி அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கொவிட் தொற்றை சமாளிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடர் நடத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post