Top News

மஹாபொல சட்டம் நேற்று முதல் அமுலில்

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (14) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இம்மாதம் 08ஆம் திகதி இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன் ஊடாக 1981ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் பெறுவது உள்ளிட்ட திருத்தங்களுக்கு உள்ளாகிறது.

இதற்கமைய 2022ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டம் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2022ஆம் வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post