நேற்று முன்தினம் அதிகாலை குருநாகல் பகுதியில்
இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தோடு சிக்கி அதி சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தோப்பூர் அப்துல் ரசாக் (நளீமி)
அவர்கள் இன்று அதிகாலை காலமானார்கள்.
நேற்று இரவு மேலதிக சிகிச்சைக்காக ஜோன் கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணிக்கு வபாத்தானார்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
இவர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்.
ரிஷாத் பதியுதீன் அவர்களினால் கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவராக இறுதியாக நியமிக்கப்பட்டு பதவி வகித்தார்..
இவர் உயிருடன் வாழ்ந்த சந்தர்ப்பத்தில் பல ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை செய்த ஒருவராவார்.
யா அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக. மேலும் அவரது மனைவி பிள்ளைகளுக்கு பூரண சுகத்தை வழங்குவாயாக.
Post a Comment