பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டித் தொடரில் 25 வயதுக்குட்பட்ட 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமையைத் தேடித்தந்த வீராங்கனையான கணேஸ் இந்துகாதேவியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று(08) சந்தித்தார்.
முல்லைத்தீவின் புதிய நகரில் பிறந்து உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பயணத்தின் விளைவாக, பாராட்டத்தகு பெறுபேற்றினை பிறந்த தாய்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தமைக்கு தனது மனமார்ந்தவாழ்த்துக்களைத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர், அவருக்கு நிதியுதவியையும் இதன் போது வழங்கி வைத்தார்.
Post a Comment