கடந்த ஐந்து வருடங்களில் செய்யப்பட்ட அழிவுகளுக்கு அநுர, ரணில், சஜித் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த விவசாய அமைச்சர்
மஹிந்தானந்த அளுத்கமகே, அரசியல் வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த அரசியல்வாதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்றும் தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் நேற்று முன்தினம் (05) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
கொரோனா வரும் போது ரணிலும் மைத்திரியும் இருந்தால் என்ன? என்று
கேட்கின்றனர் அவர்கள் இருந்திருந்தால் கடவுள் தான் காப்பாற்றியிருக்க வேண்டும் என்றார்.
ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையிலான சண்டையில் இறந்தவர்களை வீதியில் தான் புதைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைமையும், அனுரவுக்கு
எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பதவியும்
வழங்கப்பட்டமையை சுட்டிக்காட்டினார்.
அவர்களுக்கு 4 எம்.பி.க்கள் இருந்ததாகவும் தங்களிடம் 58 பேர் இருந்த போதும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு
எதிர்க்கட்சித் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா நெருக்கடியுடன் கடந்த
இரண்டு ஆண்டுகளில் நாங்கள் சில
பணிகளைச் செய்துள்ளோம் என்றும்
குறிப்பிட்டார்.
தொற்றுநோய் காரணமாக இலங்கை வெளிநாட்டு வருவாயின் பல வழிகளை
இழந்துள்ளது, இதில் சுற்றுலாத்
துறையின் அதிகபட்ச பங்களிப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்து வரும் பணம் ஆகியவை
அடங்கும் என்றார்.
இவ்வாறான விடயங்களினால்
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை
எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர்
தெரிவித்தார்.
அரிசி விலை அதிகம், எரிவாயு கிடைப்பது கடினம், பால்மா தட்டுப்பாடு, மக்கள் வாழ்வது சிரமம் என்பதை நாம் அறியாமல் இல்லை என்று தெரிவித்த அவர், சமுர்த்தி பெறுவோருக்கு 240 பில்லியன் ரூபாயும், அரச ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், படையினர் ஆகியோருக்கு 5,000 ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment