உலகளவில் வேலை ஒன்று செய்யும்போது அதிகம் விமர்சிக்கப்படும் நாடு இலங்கை என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புமாறு அரசாங்கத்திடம் அழைப்பு விடுக்கும் சிலர் காலையில் எழுந்ததும் படுக்கை விரிப்பைக் கூட மடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்த போதிலும் அவ்வாறான தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என கூறியதையடுத்து மக்கள் தமது பெட்ரோல் டேங்க்களை முழுமையாக நிரப்புவதால் சில மணி நேரங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏட்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment