அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
February 01, 2022
0
நூருள் ஹுதா உமர்
அதிபரின் தற்காலிக இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரி, சம்மாந்துறை கல்விக்கோட்டத்தின் கீழுள்ள ஜமாலியா வித்தியாலயத்தின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றை, இன்று (01) காலை முன்னெடுத்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோர், “இப்பாடசாலைக்கு அவ்வப்போது பல அதிபர்கள் நியமனம் பெற்று வந்த போதிலும் இப்பாடசாலையானது கல்வியிலோ அல்லது பௌதீக அபிவிருத்தியிலோ முன்னேற்றம் காணவில்லை .
“இந்நிலையில், சுமார் இரண்டரை வருடத்திற்கு முன்னர் இப்பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் அதிபரான எம்.எம் . மஹிஸா பானு எனும் அதிபர் முதலில் பெற்றோருக்கும் பாடசாலைக்குமான தொடர்பை ஏற்படுத்தி கல்வி மற்றும் பௌதீக அபிவிருத்தியில் பாரிய மறுமலர்ச்சியை மிக குறுகிய காலத்துக்குள் ஏற்படுத்தியுள்ளார்.
“எனவே, இந்த அதிபரை தற்காலிக இடமாற்றம் செய்ய கல்வி அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை மீள் பரிசிலனை செய்யுமாறு கேட்கின்றோர். எங்களுடைய அதிபரை மீண்டும் நியமிக்காத பட்சத்தில், எங்கள் பிள்ளைகளின் விடுகைப் பத்திரத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கான பெற்றோர்களின் கையப்பமும், கோரிக்கையும் அடங்கிய மகஜரை, சம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ. சபூரிடம் கையளித்தனர்.
Share to other apps