ராகம மருத்துவ பீடத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சம் இன்றி சட்டத்தை அமுல்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இரண்டு விசேட புலனாய்வு குழுக்களை நேற்று (02) நியமித்தார்.
இந்த இரண்டு விசாரணைக் குழுக்களும் களனி பொலிஸ் அத்தியட்சகரின்
மேற்பார்வையில் இயங்கி வருகின்றன. அரச நிறுவனமொன்றுக்கு சொந்தமான வாகனமும் அதன் சாரதியும் மருத்துவ மாணவர்களால் ராகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கண்டுபிடிப்பதற்கு
முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சு,
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் உரிய தனிப்பட்ட
சாட்சியங்களும் ஆராயப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment