கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 270 மெகாவோட் மின்பிறப்பாக்கி மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 130 மெகாவோட் மின்பிறப்பாக்கி ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளன.
இவை விரைவில் சரிசெய்யப்படும் என்று அறிவித்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment