தபால் திணைக்களத்தில் தற்போது 1,600 நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொது தபால் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் ஏராளமான தபால் நிலையங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 6,000 ஆக இருந்திருக்க வேண்டிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை இன்று சுமார் 4,000 ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு முதல் பணியாளர்களை இணைத்துக் கொள்ள அனுமதி கோரப்பட்ட போதிலும், இதுவரை அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கவில்லை.
பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வாக ஓய்வுபெற்ற 500 தபால் உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முன்வந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment