இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ, உடற் தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வரவிருக்கும் இந்திய சுற்றுப் பயணத்தில் பங்கேற்கவுள்ளார்.
அவர் திங்கட்கிழமை கொழும்பு, சுகததாச மைதனாத்தில் உடற் தகுதி சோதனைகளை மேற்கொண்டார். அவர் 2 கிலோ மீற்றர் ஓட்டத்தை 8 நிமிடங்கள் 35 வினாடிகளில் நிறைவு செய்தார், அது தவிர ஏனைய சோதனைகளிலும் அவர் பங்கெடுத்தார் என்று வீரருக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்த பிறகு தீர்மானத்தை மாற்றிய பானுக ராஜபக்ஷ, ஐந்து டி:20 போட்டிகள் கொண்ட அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இதேவளை 2022 இந்திய் பிரீமியர் லீக் சீசனிலும் பானுக ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment