Top News

ஏப்ரல் தாக்குதல் இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு..



ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது சார்ந்த சாட்சியங்கள் அடங்கிய சகல அத்தியாயங்களும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களுடன் கூடிய 88 அத்தியாயங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை ஜனாதிபதி சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் இன்று சமர்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதாலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக ஆய்வுக்காகவும் குறித்த அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. (R)

Post a Comment

Previous Post Next Post