கொரோனா நோய்க்கான பாணி மருந்தை அறிமுகப்படுத்தியதற்காக அதிகம் பேசப்பட்ட நபரான தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர், கொரேனா தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்ற போதிலும், கொரோனா நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார்.
கேகாலை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட ரபிட் அன்டிஜென் பரிசோதனையைத் தொடர்ந்து அவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
Post a Comment