Top News

சண்முகா இந்துக் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி அவர்களே..!! உங்களுக்கு பொட்டு வைக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தவர் யார்?



Mohamed Bin Latheef

சண்முகா இந்துக் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி அவர்களே..!!

உங்களுக்கு பொட்டு வைக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தவர் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

1995 களில் சந்திரிக்கா அரசில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிக்கும் போது யாரும் தமது மத அடையாளத்தை வெளிக்காட்ட கூடாது என்று ஒரு உத்தரவு கூட்டுத்தாபனத்தின் மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப்படுகிறது.

இதனால் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து கொண்டு செய்தி வாசிக்க தடை ஏற்படுகிறது.

இதற்கெதிராக குரல் எழுப்ப ஆளுங்கட்சியில் தமிழ் சமூகம் சார்ந்த அமைச்சர்கள் யாரும் இருக்கவுமில்லை அரசில் பலம் வாய்ந்த அமைச்சராக விளங்கிய SLMC ன் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் துணிந்தார்,

நியாயங்களை எடுத்துக்கூறி தமிழ் பெண்களுக்கு பொட்டு வைக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார்.

இந்த செயல் SLMC க்குள்ளே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக்கொடுக்காமல் தமிழர்களுக்காக உழைத்தார் என்று.

கொள்ளுப்பிட்டி மேமன் மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் இதற்கான பதிலையும் வழங்கினார்.

அவர் சொன்னார்,

"தமிழர்களுக்கு கிடைக்காவிட்டால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது" இந்த

பதிலால் சர்ச்சையும் அடங்கியது.



பொட்டும் பூவும் எப்படி ஓர் இனத்தின் அடையாளமோ முக்காடும் ஓர் இனத்தின் அடையாளம் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

Post a Comment

Previous Post Next Post