இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டீ-20 தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையில், அவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆகையால், இன்று கன்பெர்ரா மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது டீ-20 போட்டியில் அவர் விளையாடமாட்டார். கடந்த இரு போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஹசரங்க இப்போட்டியில் விளையாடாதது அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.
முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் பினுர பெனார்டோ கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டுள்ள குசல் மெண்டிஸ் இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட டீ-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment