எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தலை கருத்திற்கொண்டு
மக்களுக்கு பணியாற்றுபவர்கள் தாங்கள் அல்லவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெறும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் நாங்கள் மக்களின் நலன் கருதியே அனைத்து திட்டங்களையும் செயற்படுத்தியதாகவும், தேர்தலை இலக்கு வைத்து எந்தவொரு பணிகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, நாட்டு மக்கள் தொடர்ந்து தம்முடன் இருப்பதாக தெரிவித்த பிரதமர், எதிர்க்கட்சிகளுக்கு முடியுமானால் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசை வீழ்த்தி காட்டுமாறு சவால் விடுப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
Post a Comment