தங்காலை − விதாரன்தெனிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17ஆம் திகதி இரவு விதாரன்தெனிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மோதலை அடுத்தே, இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் 36 வயதான சத்துரங்க டில்ஷான் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோர் காயமடைந்துள்ளதுடன், மனைவியின் சகோதரன் கவலைக்கிடமான நிலையில் கராபிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment