கொச்சிக்கடை ஒப்பெரிய (Obberiya) பகுதியில் இருந்து கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயதுடைய மெரின் ஸ்டீபன் என்ற சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் “ஒட்டசம்” (autistic) பாதிப்புடையவர் என்றும், அருகில் உள்ள தேவாலயத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்தால் 07-8591631, 031-2277222, மற்றும் 031-2276338 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Post a Comment