முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் என ராஜபக்ஷக்களுக்கு சவால் விடுவதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த, அரசாங்கத்தை எவ்வாறு வெளியேற்றுவதென்றே மக்கள் பார்த்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தங்கல்லயில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், உலக மக்கள் அனைவரும் ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இலங்கை மக்களோ அரசாங்கத்தை எவ்வாறு வெளியேற்றுவதென்றேப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக நாட்டில் அதிகளவில் சேறுபூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எதிரிகளுக்கு அதிகமாக வலிக்கிறது என்பதே இதனூடாக தெரிகிறது எனவும் கூறினார்.
Post a Comment