Top News

சுருக்குவலைக்கான அனுமதியை உடனடியாக வழங்குங்கள்



ஹஸ்பர்

திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான சுருக்குவலை அனுமதிப்பத்திரங்களை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுருக்குவலைக்கான அனுமதி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இருந்தும் இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் இந்த அனுமதி பத்திரங்களை விநியோகிப்பதற்கான அனுமதி திருகோணமலை மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளருக்கு வழங்கப்படடடவில்லை.

கடைசியாக 2019 ஆம் ஆண்டே இந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு வருடகாலமாக இந்த அனுமதி கிடைக்காததால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதனால் பலர் கடற்படையினரால் கைதும் செய்யப்படுகின்றனர்.

எனவே புத்தளம் மற்றும் மன்னார் பகுதிகளை போன்று திருகோணமலையிலும் இந்த அனுமதி பத்திரங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைளுக்கு அனுமதியை வழங்குமாறு தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post