உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த படையினருக்கு ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையில், போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷ்ய படையினருக்கு அந்நாட்டு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment