மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை பலி!

ADMIN
0



இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தந்தையின் சடலத்தை இராகலை பொலிஸார் இன்று (05) காலை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் டெல்மார் மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம், வயது 62 என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையாக மாறியுள்ள நிலையில் மகன் தந்தையை இரும்பு ஒன்றால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து அதிக இரத்த போக்கு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் விசாரணைக்கு பின் சடலத்தை சட்டவைத்தியர் ஊடாக பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை கைது செய்துள்ள இராகலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராகலை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top