எதிர்காலத்தில் நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எவையும் இல்லை எனவும், மருந்துப் பொருட்கள் தவிர்ந்த பல பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு தேவையற்ற பயன்களை அடைய முயற்சிக்க வேண்டாமென்றும் வர்த்தகர்களிடம் நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். (R)
Post a Comment