கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில் நவீன தொழில்நுட்ப கமரா பொறுத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக வகுப்புக்கு வந்த மாணவிகள் சிலர் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டுள்ளதை அவதானித்து அது தொடர்பில் தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கையடக்க தொலைபேசியிலோ அல்லது மடிக்கணினியிலோ அங்கு நடப்பதை நேரடியாகப் பார்க்கும் வகையில் கமரா பொறுத்தப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக வகுப்பு நிலையத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். பெண் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் கமராவை பொறுத்திய நபரை விரைவில் கைது செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Post a Comment