Top News

அம்பாறையிலும் கையெழுத்து வேட்டை




சகா

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

இன்று காலை 10 மணியளவில் காரைதீவு பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்து வெட்டை இ.த.அ.கட்சி மாவட்ட அமைப்பாளரும் காரைதீவு தவிசாளருமான கி.ஜெயசிறில் தலைமையில் ஆரம்பமாகியது.

அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா..அரியநேத்திரன் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட பிரமுகர்கள் முதலில கையெழுத்திட்டனர்.

உங்கள் ஒவ்வொருவரினதும் கையொப்பங்களும் உங்கள் பாதுகாப்புக்கானதும் உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்கானது ஆகும் என இ.த.அ.கட்சி மாவட்ட அமைப்பாளரும் தவிசாளருமான கி.ஜெயசிறில் தெரிவித்தார். (R)


Post a Comment

Previous Post Next Post