திருடர்களிடமிருந்து, திருடிய குற்றத்தில் CID உயர் அதிகாரி மீது விசாரணை.

ADMIN
0




குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உயர் பதவியை வகித்த

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




72 மில்லியன் ரூபா பணம் நிதி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் சிலர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.




அந்தப் பணம் சந்தேக நபர்களிடமிருந்து அதிகாரியினால் மோசடி செய்யப்பட்டுள்ளது.




நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முறைப்பாடு செய்த போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.




நைஜீரியர்களை கைது செய்தமை தொடர்பான சில முக்கிய ஆவணங்களில் கையொப்பமிட்டது தொடர்பாக முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரியிடம் தனியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top