வௌிநாடுகளுக்கு செல்வோருக்காக போலி PCR அறிக்கைகளை தயாரித்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 33 மற்றும் 28 வயதான மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் வைத்தியசாலையொன்றின் பெயரைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் போலியாக PCR அறிக்கைகளை தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (R)
Post a Comment