பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை வழங்கும் சகல மத்திய நிலையங்களின் தகவல்களும் உரிய பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படுவது கட்டாயமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல்களை வழங்காது போலியான தரவுகளை உள்ளடக்கி பி.சி.ஆர் அறிக்கைகளை வழங்கும் மத்திய நிலையங்கள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் உரிய தகவல்களை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment