- Abdur Razik -
எல்லா புகழும் இறைவனுக்கே! கைது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன்!
கடந்த 2016.11.03ம் திகதி முஸ்லிம் தனியார் சட்டத்தை ஜீ எஸ் பீ வரிச்சலுகைக்காக வரையறையில்லாது மாற்றம் செய்ய முயன்ற அப்போதைய அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்து நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் கொலை மிரட்டலும் அச்சுறுத்தலும் விடுவித்த இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் இடைவிடாது கொச்சை படுத்தி வந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை பகிரங்கமாக சமூக உணர்வுடனும் பொறுப்புடனும் கண்டித்து பேசினேன்.
சட்டத்தின் எந்த அடிப்படையுமில்லாத, வெறும் அரசியல் பார்வையுடனும் இன துவேசத்துடனும் என் மீது தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு சுமார் 05 வருடங்கள் நீதவான் நீதி மண்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.
இறுதியில் இன்று சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க என் மீது தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை இனியும் தொடர முடியாது என்று நீதிபதி தீர்பளித்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்!
சத்தியம் என்றும் நிலைக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
என்றும் எனக்கு உதவும் என் இறைவனுக்கு பல கோடி நன்றிகள் அல்ஹம்துலில்லாஹ்!
இந்த வழக்கு தொடர்பில் எங்களுடன் அயராது பாடுபட்ட சிரேச்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்கு மன மார்ந்த பாராட்டுக்கள் தெரிவிப்பதுடன் வழக்கு விடயத்தில் எனக்கு எல்லா வகையிலும் உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஜஸாகுமுல்லாஹு கைராஹ்!
Post a Comment