எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் பல மின்
உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இடைநிறுத்தப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தற்போதைய மின்வெட்டு ஒரு நாளைக்கு 6 ½ மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன .
அடுத்த வாரம் முதல் 10 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் மற்றும் நீர் மின் நிலையங்களில் தண்ணீர் இல்லாததால் மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment