முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் - கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதியே இவ்வாறான தவறான முடிவெடுத்து புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார்.
21 வயதுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து அம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் உடலம் மீட்கப்பட்டு மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். (R)
Post a Comment