ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது.
மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கு செலுத்துவதற்கு இலங்கையிடம் போதுமான அமெரிக்க டொலர்கள் இல்லை.
அண்மையில், பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களின் புதிய கடன் வரியை (LOC) இந்தியா வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
Post a Comment