4,000 கொள்கலன் பாரவூர்திகள் இயங்காது – சனத் மஞ்சுளா

ADMIN
0





டீசல் பற்றாக்குறையால் சுமார் 4,000 கொள்கலன் பாரவூர்திகள் இயங்காது என இலங்கை கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தலைவர் சனத் மஞ்சுளா தெரிவித்தார்.




இதனால், நாட்டுக்கான உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.




சுமார் 6,000 கொள்கலன் பாரவூர்திகள் இருந்தாலும், அதில் சுமார் 2000 மட்டுமே இயக்கப்படுகின்றன.




இயங்கும் கொள்கலன் வாகனங்களும் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இயங்குவதால் வெளி மாகாணங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top