தவறான தகவல்களை முன்வைத்து சட்டவிரோதமாக கடவுச்சீட்டு பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (11) அறிவிக்கப்பட இருந்த போது குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்கை மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்குவதாக கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான சசி வீரவன்சவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
Post a Comment