ஊடகப்பிரிவு-
இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. Zoom தொழில்நுட்பத்தினூடாகவே இந்த அரசியல் அதிகாரசபைக் கூட்டம் இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுருத்தி வந்த போதும், இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே, இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்திருப்பது தொடர்பிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் நாளைய சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.
Post a Comment