எரிபொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்காத காரணத்தினால் தற்போது எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஆகவே கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு டொலர் செலுத்தும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
எரிபொருள் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட கூடாது என்ற காரணத்தினால் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சகர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டு கையிருப்பு சடுதியாக குறைவடைந்துள்ளதால் எரிபொருள், மின்னுற்பத்தி ஆகிய துறைகள் பாரிய சவால்களை அவை இரண்டும் எதிர்க்கொண்டுள்ளது என கூறினார்.
எரிபொருள் இறக்குமதி மீதான வரியை தற்காலிகமாக நீக்குமாறு நிதியமைச்சிடம் இருமுறை உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளதாகவும் அதற்கு சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Post a Comment