விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கின்றது.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றும் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக இருந்தது.
டீசல் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மேலும் 2 நாட்கள் செல்லும் என கனியவள கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எரிவாயு விநியோகம், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லிட்ரோ நிறுவனத்தினால் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் சந்தையில் தட்டுப்பாடு தொடர்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment