கொரோனாவால் மரணித்தவர்களை எந்த மையவாடியிலும் அடக்கலாம் என அரசாங்கம் திடீர் முடிவெடுத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
March 05, 2022
0
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
இன்று இந்த அரசாங்கம் ஜெனீவா கூட்டத் தொடர் இடம்பெறும் சந்தர்ப்பத்தில்கொவிட் மூலம் மரணிக்கும் ஜனாசாக்களை/உடல்களை அந்தந்த பிரதேசத்தில் அடக்கலாம் என்ற முடிவை திடீர் என்று அறிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பா உ இம்ரான் மகரூப் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கொவிட்டால் இறந்த உடல்களை அந்தந்த பிரதேசத்தில் அடக்க அனுமதி தருமாறு ஆரம்பத்தில் கேட்டிருத்தோம். WHO மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் உடல்களை அடக்க முடியும் என்று நாங்கள் சொன்ன சந்தர்ப்பத்தில் உடல்கள் மீது அரசியல் சாயம் பூசி வாக்குத்தேடியவர்களே இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.
இந்த முடிவு ஏதோ ஒரு மாயையை ஏற்படுத்துவது போன்று மக்களால் பார்க்கப்படுகிறது. இத்த அரசாங்கம் மீண்டும் எதை செய்வதற்கு தயாராகிறது என்ற கேள்வியும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Share to other apps