முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க விரைவில் முக்கிய பங்களிப்பொன்றை வழங்கவுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
விரைவில் தேசிய கருத்தொருமைப்பாடு ஏற்படும் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபடும் இதில் ரணில்விக்கிரமசிங்க முக்கிய பங்களிப்பை வழங்குவார் என ஐக்கியதேசிய கட்சியின் வஜிர அபயவர்த்தன செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
கட்சி அரசியலை மறந்துவிட்டு தேசிய கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என அவர் தெரிவித்துள்ளா
நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்கக்கூடிய திறமையான நபரிடம் நாட்டை கையளிக்கவேண்டும் என வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை கையாள்வதற்கு மிகவும் பொருத்தமான நபர் ரணில்விக்கிரமசிங்கவே என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரே தேசத்தின் பாதுகாவலனாக வருவார் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கு 1999இல் ரஸ்யா மேற்கொண்டஅரசியல் சீர்திருத்தம் போன்றதொன்றே அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வேளை ரஸ்யாவில் ஜனாதிபதி பொறிஸ்யெல்ட்சின் பிரதமராக விளாடிமிர் புட்டினை நியமித்தார்,புட்டின் பின்னர் வெற்றிகரமாக நாட்டின் தலைவரானார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில அரசியல் தலைவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் நாங்கள் செய்துகாட்டுவோம் என்கின்றனர் ஆனால் முதலில் அவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment