Headlines
Loading...
சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது , பிறருடன் தொடர்புகளை பேணும்போது பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது , பிறருடன் தொடர்புகளை பேணும்போது பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும்.




சைபர் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட


பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன, நாளொன்றுக்கு 15 -20 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், இதில் அதிகளவில் பெண்களே பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


கணினி குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவினருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 2 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நாளொன்றுக்கு 15 - 20 முறைப்பாடுகள் தற்போது கிடைப்பதாகவும் தெரிவித்தார். 


சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இத்தரவுகள் காட்டுவதாகவும், பெண்களே இதில் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது, பிறருடன் தொடர்புகளை பேணும்போது பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 


சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை கொழும்பில் உள்ள  கணினி குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவினருக்கு அல்லது கண்டி, மாத்தளையில் உள்ள கிளை பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்யலாம். அல்லது dir.ccid@police.lk என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 Comments: