Top News

இன்றிரவு ஜனாதிபதி விசேட உரை





இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்கள் மத்தியில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.


இன்றிரவு 8:30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.


நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு குறித்து ஜனாதிபதி தனது உரையில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதியின் விசேட உரை, அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படவுள்ளது.


Post a Comment

Previous Post Next Post