ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு நாளை (16) இரவு 8.30க்கு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு புதன்கிழமை உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நேரம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. உரையாற்றுவது தொடர்பிலான நேரம், இன்றைய தினமே அறிவிக்கப்பட்டது.
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரையாற்றும் நேரத்தில், பல இடங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்றும் அறியமுடிகின்றது.
அந்தவகையில், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அட்டவணையின் பிரகாரம், நாளை (16) இரவு 8.30 மணிமுதல் 21.45 மணிவரையிலும் ஜே.கே.எல் ஆகிய வலயங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கும்.
இதேவேளை, கீ, ஆர், எஸ் ஆகிய வலயங்களில், இரவு 19.15 முதல் 21 மணிவரையிலும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment