Top News

தீவிரமடையும் எரிபொருள் பிரச்சினை - கொழும்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை!


கொழும்பின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சுற்றி விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் (IGP) பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் ஏற்படக்கூடிய பதற்றமான சூழ்நிலைகளை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பதற்றமான சூழ்நிலைகளைத் தடுக்கவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயம், சுற்றுலா, தீயணைப்புப் படை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்காக பயணிக்கும் முன்னுரிமை வாகனங்களுக்கு மேலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post