ரணில் விக்ரமசிங்ஹவின் மனம் வேதனைப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கோருகிறேன் ; ஜனாதிபதி

ADMIN
0

 




பெரும்பாலான கட்சிகள் நிராகரித்த சூழ்நிலையில், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்காகவே தான் சர்வகட்சி மாநாட்டிற்கு சமூகமளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு கடந்த அரசாங்கமே காரணம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மாநாடு ஆரம்பத்திலேயே குற்றஞ்சுமத்தியதாக கூறிய ரணில் விக்ரமசிங்க, அதற்கு தான் முன்னரே உரிய பதிலை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், இதன்போது குறுக்கிட்டு பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மனம் வேதனைப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் தான் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top