நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வக் கட்சி மாநாடு உதவியாக அமைந்தது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான ஒரே தீர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாத்திரமே.
இதற்கு மாற்று வழிகள் கிடையாது. நாங்கள் கோட்டாபய ராஜபக்ச மீது நம்பிக்கை கொண்டு முன்நோக்கி செல்வது மாத்திரமே மாற்று வழி. இதனால், அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காணவே ஜனாதிபதி சர்வக் கட்சி மாநாட்டை கூட்டினார்.
நேர்மையாக, அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக் தீர்வு கண்பதற்காகவே சர்வக் கட்சி மாநாட்டை கூட்டியதாக ஜனாதிபதி கூறினார் எனவும் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment