புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புத்தாண்டில் அதிர்ஷ்டம்

ADMIN
0


புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடியை தீர்ப்பதற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரு ஊக்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உடன் அமுலாகும் வகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை 230 ரூபாவாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top