Top News

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

 



இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 28 – 30 ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அவர் இந்த விஜயத்தின்போது, கொழும்பில் நடைபெறும் BIMSTEC மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post