ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணாயக்கார ஆகியோர் இன்று அதிகாலை ஜெனீவா நகருக்கு பயணித்துள்ளனர்.
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் விடயங்களை முன்வைப்பதற்காக இவர்கள் ஜெனீவாவிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(28) ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட எழுத்துமூல சமர்ப்பணம் தொடர்பில் நாளை மறுதினம்(03) கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment