போதையில் வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் கைது
March 27, 2022
0
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் இன்று (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுகாதாரப் பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதாரப் பணிப்பாளர், விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Share to other apps