Top News

எரிவாயு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு




சமையல் எரிவாயு தொடர்பில், லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்களும் அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளன.

தமக்கான கடன் பத்திரத்தை வங்கிகள் இன்னுமே வெளியிடவில்லை. இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அடங்கிய மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. எனினும், தறையிக்கப்படாமையால், எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லாஃப் எரிவாயு விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, லாஃப் எரிவாயுவை நாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் லாஃப் எரிவாயு சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் தலைவர் W.K.H.வேகபிட்டிய தெரிவிக்கின்றார். (R)

Post a Comment

Previous Post Next Post